பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, ஐ.பி.எல். கிரிக்கெட் என பல தொழில்களை செய்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து வருகிறது. கடைசியாக நடித்த படமும் ஆயிரம் கோடி வசூலை கொடுத்துள்ளது.தற்போது ஷாருக்கான் சத்தமே இல்லாமல் புது தொழில் ஒன்றில் வபலகோடி வருவாய் ஈட்டி வருகிறார். அதாவது புதிதாக மது விற்பனையை தொடங்கி இருக்கிறார். மேலும் தனது மகன் ஆர்யன் கானையும் பிசினஸில் சேர்த்துக்கொண்டுள்ளார். டி’யாவோல் என்ற பிராண்டில் மது வகைகளை ஷாருக்கான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
