Touring Talkies
100% Cinema

Tuesday, March 25, 2025

Touring Talkies

தென்னிந்திய சினிமாவிடம் பாலிவுட் சினிமா கற்றுக்கொள்ள வேண்டும்… நடிகர் சன்னி தியோல் அட்வைஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சன்னி தியோல். இவர் “பேட்ஆப், சோர், சாம்பியன்ஸ், ஹீரோஸ், ரைட் யா ராங், த மேன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமடைந்துள்ளார். தற்போது மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜாத்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே மாதம் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்தச் சூழலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சன்னி தியோல், தென்னிந்திய சினிமாவிடம் பாலிவுட் சினிமா கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: “தென்னிந்திய சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனரை நம்புகின்றனர். அவரது விரிவான பார்வையை நம்புகிறார்கள். ஒரு கதையே அவர்களிடம் ஹீரோவாக இருக்கிறது. அவர்கள் அனைவருடனும் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர்கள் இயக்குனருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குகிறார்கள். இதனால் அந்தக் கதையைச் சிறப்பாகத் திரைப்படமாக மாற்ற இயல்கிறது. இவ்வாறு உருவாகும் படங்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. எனவே, தென்னிந்திய சினிமாவை அடிக்கடி பார்த்து, பாலிவுட் சினிமாவும் பல முக்கியமான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News