Saturday, September 14, 2024

தளபதி 69 படத்தில் வில்லனாக களமிறங்குகிறாரா பாபி தியோல்? #Thalapathy69

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படம் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் வெளியான முதல் 8 நாட்களில் ரூ. 332 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் தெரிவிக்கிறது. தற்போதும் பெரும்பாலான தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதால், இந்த வார இறுதியில் கூடுதல் வசூல் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் தனது 69வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இதில், மமிதா பைஜூ மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News