Wednesday, September 25, 2024

‘டாக்ஸிக் காதல் ‘ பாடலை பாடியது மட்டுமின்றி ஆட்டமும் போட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது மீடியா வாழ்க்கையை தொலைக்காட்சி தொகுப்பாளராக துவங்கி, பின்னர் ராஜாராணி போன்ற சில சீரியல்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டு டைட்டில் வென்றாலும், எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது, இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இமைகாலோ, தம்மா துண்டு காதல் போன்ற ஆல்பங்களில் நடித்த அவர், தற்போது ‘டாக்ஸிக் காதல்’ எனும் புதிய இசை ஆல்பத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். அருண் ராஜ் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார், மேலும் அர்ச்சனாவே பாடியுள்ளார்.

இது தொடர்பாக, அர்ச்சனா, “டாக்ஸிக் காதல் எனும் கருத்து என்னை உடனே கவர்ந்தது. இது ஜென்-ஸீ தலைமுறையுடன் தொடர்புடையது. நாங்கள் உருவாக்கிய இசையை அனைவரும் கேட்க வேண்டும் என ஆவலுடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News