நடிகை அம்ரிதா ஐயர் நடிகையாக மாறுவதற்கு முன்பு, இவர் ஒரு மாநில அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சிறுவயதிலிருந்தே கூடைப்பந்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடியவர். ஆனால் பின்னர் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆழ்ந்த விருப்பம் காரணமாக, திரையுலகை நோக்கி பயணித்தார்.

முதலில் துணை நடிகையாகவும், சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்த இவர், தன் திறமையால் படிப்படியாக முன்னேறி கதாநாயகி நிலையை அடைந்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்த அனுமன் படம் ரூ.300 கோடி வசூல் செய்து பெரும் வெற்றியைப் பெற்றது.
தமிழில் படைவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அம்ரிதா, தெலுங்கில் ரெட் படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்தார். அதன் பிறகு காளி, லிப்ட், பிகில் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

