Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்… ஜன நாயகன் பட நடிகர் பாபி தியோல் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் பாபி தியோல். ‘பர்சாத்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல்’ படத்தில் நடித்து பெரும் கவனத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழில் கங்குவா’ படத்திலும், தெலுங்கில் டகு மகாராஜா’ என்ற படத்திலும் நடித்தார். தற்போது எச். வினோத் இயக்கி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், குடிப்பழக்கத்தை நிறுத்தியதைக் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். “நான் உண்மையிலேயே குடியை நிறுத்திவிட்டேன். கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 

வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. நான் குடிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு சிறந்த மனிதனாக மாறிவிட்டேன் என்று உணர்கிறேன். மேலும், எனக்குத் தெரிந்த அனைவருடனும் எனது உறவு நூறு மடங்கு சிறப்பாகிவிட்டது என்றும் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News