தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், தனது 62வது திரைப்படமான ‘வீர தீர சூரன் 2’யில் நடித்ததை முடித்துள்ளார். இந்த படத்தை ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன் மற்றும் சித்திக் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று மதுரையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடன் படம் தொடர்புடைய குழுவினரும் பங்கேற்றனர்.

அந்நிகழ்வில் பேசிய விக்ரம், “முன்னாடி காதல் தோல்வியால் தான் தாடி வளர்க்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது காதலிக்கவே தாடி வைக்கும் காலம் வந்துவிட்டது. தற்போதெல்லாம் வரும் ஒவ்வொரு படத்திலும் நானும் தாடியுடன் தான் நடித்து வருகிறேன்,” என்று அவர் கூறினார்.