ராஜமவுலி இயக்கத்தில், இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த ‘பாகுபலி’ திரைப்படம், 2015 ஜூலை 10ஆம் தேதி வெளியானது. இந்திய சினிமாவை மட்டுமல்லாது உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த மிக முக்கியமான படமாக இது அமைந்தது.

படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று படக்குழுவினர் பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதே நேரத்தில், படத்தில் நடித்தவர்கள் நேரில் சந்தித்து ஒரு ரீயூனியனாக ஒன்றுகூடினர்.
அந்த சந்திப்பில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் தமன்னா மற்றும் அனுஷ்கா அந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த ரீயூனியனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். ‘பாகுபலி’ படத்தின் இரு பாகங்களையும் ஒன்றிணைத்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி திரையில் மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.