Saturday, October 5, 2024

அர்ஜூன் தாஸ் அதிதி ஷங்கர் நடிக்கும் ‘ஒன்ஸ் மோர்’…காதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்தின் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்கு ‘ஒன்ஸ் மோர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான இசையை மலையாள இசையமைப்பாளரான ஹேசம் அப்துல் வாகப் அமைக்கிறார். குட் நைட், லவ்வர் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதே தலைப்பில் சிவாஜி மற்றும் விஜய் நடித்த ‘ஒன்ஸ் மோர்’ என்ற படம் 1997ல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News