பின்னணி பாடகர் திப்பு மகன் சாய் அபியன்கர், கடந்த ஆண்டில் தனது இசை திறமையால் ‘கட்சி சேர, ஆச கூட’ என்ற ஆல்பம் பாடல்களை இசையமைத்து, பாடி, நடனமாடி பெரும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர் தமிழில் ‘பென்ஸ்’ மற்றும் ‘சூர்யா 45’ என்ற இரண்டு படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகியுள்ளார்.
இதில், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ என்ற திரைப்படத்துக்கு சாய் அபியன்கர் மொத்தம் 8 பாடல்களை இசையமைத்துள்ளார்.

அந்தப் பாடல்களில் 5 பாடல்கள் தமிழிலும், 3 பாடல்கள் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.