நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இந்த படம், முன்னதாக இவர்களது வெற்றிப்படமான ராஞ்சனாவின் கதையுடன் தொடர்புடையதாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் நாயகியாக கிரீத்தி சனோன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர்.ரகுமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் மொத்த நேரத்தில் அந்த பாடல்கள் மட்டும் 51 நிமிடங்களைப் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

