வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இயக்குனர் வெங்கி அட்லூரி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
இந்த திரைப்படம் வெளியானதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகளவில் ரூ. 110 கோடி வசூலித்தது. இந்நிலையில், இயக்குனர் வெங்கி அட்லூரி, மீண்டும் தனுஷ் உடன் இணைந்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.