வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘Unkill _123’ என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.இதில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார்.

அனுராக் காஷ்யப் உடைந்த கண்கண்ணாடியுடன் இருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அனுராக் இப்படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும், அவரது கதாபாத்திரம் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரபூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ’கூர்கா’ , ‘டார்லிங்’ மற்றும் ’பட்டி’ போன்ற படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

