இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமாகிய நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவின் 100வது பிறந்த நாள் நேற்று அக்டோபர் 28 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ANR அறக்கட்டளையின் கீழ் அவரது மகனான நாகார்ஜுனாவின் தலைமையில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தி லெஜன்ட் அமிதாப் பச்சன் ANR விருது வழங்கினார்.
அக்கினேனி நாகேஸ்வரராவ் தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் முக்கிய ஆளுமையாக விளங்கினார். அவர் மறைந்த பிறகு, அவரது மகன் நாகார்ஜுனா, அவரது பிறந்த நாளில் தெலுங்கு சினிமாவிற்கு சிறப்பாக பங்களிப்பினை வழங்குவோருக்கு விருது வழங்கி கௌரவித்து வருவது பாராட்டத்தக்கது.