நடிகர் பிரித்விராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் தந்தை இறந்த சமயத்தில் எல்லாம் நான் பெரும் மன வேதனையில் இருக்கிறேன். அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்த ரசிகர்கள், மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களை பார்த்ததும், ஆரவாரம் செய்து, கைதட்டி விசில் அடித்தார்கள். அந்த ரசிகர்கள் யாருமே எனது மனநிலை குறித்து, எனது குடும்பத்தின் மனநிலை குறித்து எதுவும் யோசிக்கவில்லை” எனக் கூறினார். இவரது இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரித்விராஜின் தந்தை சுகுமாரன், கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
