மதராச பட்டினம்’, ‘ஐ’ உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்த அவர், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். திருமணமாகும் முன்பே இவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின், எமி ஜாக்சன் பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், எமி மீண்டும் கர்ப்பமானார். கர்ப்ப கால புகைப்படங்களை எமியும், எட் வெஸ்ட்விக்கும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
தற்போது எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எட் வெஸ்ட்விக் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இதுபற்றிய பதிவில், “ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக், உன்னை இந்த உலகத்துக்கு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். புதிதாகப் பிறந்த மகனின் பெயரை சமூக வலைதளத்தில் பகிர்ந்த எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.