பாலிவுட்டில் முக்கியமான குடும்பமாக இருப்பது அமிதாப்பச்சன் குடும்பம். அமிதாப் மனைவி ஜெயபாதுரி முன்னாள் நடிகை, மகன் அபிஷேக் நடிகர், மருமகள் ஐஸ்வர்யா நடிகை என குடும்பமே நட்சத்திரக் குடும்பம்தான்.அவர்கள் சமீபத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பில் 10 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஓபராய் எடர்னியா என்ற குடியிருப்பில் சுமார் 10 ஆயிரம் சதுரஅடி அளவில் 20 கார்களை நிறுத்தும் வசதி கொண்ட சுமார் 1000 சதுர அடி கொண்ட 8 வீடுகள் 900 சதுர அடி கொண்ட 2 வீடுகளை வாங்கியுள்ளார்களாம். அக்டோபர் 9ம் தேதி பதிவு செய்யப்பட்ட ஆவணத்திற்கான கட்டணமாக மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தியுள்ளார்கள்.அதில் 6 வீடுகள் அபிஷேக் பச்சன் பெயரிலும், 4 வீடுகள் அமிதாப் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more