Thursday, October 17, 2024

உலகநாயகனுக்காக அமரன் படத்திற்கு கிடைத்த ஸ்பெஷல் அனுமதி… என்னனு பாக்கலாம் வாங்க! #Amaran

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அமரன்”. இப்படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், சிவகார்த்திகேயன், முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முகுந்த் வரதராஜன், தமிழகம் பெருமை கொள்ளும் வீரர் என்ற சிறப்புடன், அவரது வாழ்க்கை திரையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காஷ்மீரில் நடைபெற்றது. இதுவரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறாத பல இடங்களில் “அமரன்” படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. கமல்ஹாசனுக்காக காஷ்மீர் அரசு, இதுவரை அனுமதி வழங்கப்படாத இடங்களில் கூட படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளது. இது கோலிவுட் உலகத்தில் மிகப் பெரிய சாதனை என்று பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் பல திரைப்படங்கள் இதுவரை படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் “அமரன்” திரைப்படம், இதுவரை படப்பிடிப்பே நடைபெறாத பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், திரையில் “அமரன்” படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஒரு அற்புதமான அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News