நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் சில மாதங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது அவர் நடித்திருந்த மற்றொரு பழைய திரைப்படமான ஆர்யா 2, இது 2009-ஆம் ஆண்டு வெளியானதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்ததாலும், சமீபத்தில் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகி உள்ளது. இந்தப் படத்தையும் புஷ்பா 2-க்கு இயக்குனராக இருந்த சுகுமார் தான் இயக்கியிருந்தார்.
புஷ்பா 2 வெளியானபோது ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ, அதே அளவிலேயே ஆர்யா 2 திரைப்படத்திற்கும் தற்போது ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் ஆடம்பரமாக குவிந்ததுடன், நேற்று சனிக்கிழமை அன்று இந்தப் படம் ஹவுஸ்புல் என நிரம்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.