புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீயுடன் புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ, சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து உருவாக்கிய ‘ஜவான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் மீது ரசிகர்களும் சினிமா வட்டாரமும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த புதிய திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று சென்னைக்கு வந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும், இயக்குநர் அட்லீயையும் சந்தித்து இப்படம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் இந்த புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.