அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. ‘ஒரு ஆடர் லவ்’ திரைப்படத்தின் மூலம் இணையதளத்தில் வைரலான நடிகை ப்ரியா வாரியர், இளைஞர்களின் விருப்பப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்தார். தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடலுக்காக அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் மிகுந்த உணர்வுடன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது பதிவில் ப்ரியா வாரியர் கூறியதாவது: ‘‘எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை! இந்த உணர்வுகளை நான் ஒரு நீண்ட காலமாக என் உள்ளத்தில் வைத்திருந்தேன். நான் என்ன எழுதினாலும், உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பை முழுமையாக வெளிப்படுத்த முடியாது சார். முதல் சந்திப்பிலிருந்து இறுதி படப்பிடிப்பு வரை யாரும் புறக்கணிக்கப்படவில்லை என்பதைக் நீங்கள் உறுதி செய்தீர்கள். செட்டில் எப்போதும் எங்களை கவனித்து, நலன்கள் குறித்தாக அதிக அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள். படப்பிடிப்புக்காலத்தில் நாம் ஒன்றாக கப்பலில் சாப்பிட்ட தருணங்கள், நகைச்சுவை, மற்றும் சிறந்த நினைவுகளை மறக்க முடியவில்லை.
இவ்வளவு பேராசையும் ஆர்வமும் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. உங்களுள் இருக்கும் அந்த சிறிய ‘பினோக்கியோ’ அம்சத்தைக் கண்டிப்பாக நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். குடும்பம், கார்கள், பயணங்கள் மற்றும் போட்டிகள் குறித்து நீங்கள் பேசும் போதே உங்கள் கண்களில் காணப்படும் பிரகாசம், சோர்ந்தவர்களுக்கு பெரும் உற்சாகம் தருகிறது. உங்கள் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் கவனித்து அங்கீகரிப்பது, உங்கள் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு என் போன்ற இளம் கலைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக உள்ளது. இதை வாழ்க்கை முழுவதும் மனத்தில் வைத்துக் கொள்வேன்.
நீங்கள் ஒரு உண்மையான ரத்தினம்! வாழ்க்கை எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவுடன் இருப்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். ‘தொட்டு தொட்டு’ பாடல் சிறப்பாக இருக்கும். அஜித் சார், உங்களுடன் வேலை செய்த அனுபவத்தை நான் என்றும் மறக்கமாட்டேன்’’ என அவர் பதிவிட்டுள்ளார்