அஜித் குமார் மற்றும் அவரது அஜித் குமார் ரேஸிங் அணி, கடந்த ஆண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ள ஜிடி 3 ரக கார் பந்தயங்களில் கலந்து கொள்கின்றனர்.பல கட்டங்களாக நடைபெறும் இந்த பந்தயத்தின் முதல் கட்டம் துபாய் நகரில் நடைபெற்றது. இதில் அஜித் குமார் ரேஸிங் அணி, Porsche 911 GT3 பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
துபாயில் சிறப்பாக முடித்த அஜித் குமார் ரேஸிங் அணி, அடுத்ததாக இத்தாலி நாட்டின் முகெல்லோ (Mugello) ரேஸில் மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் பங்கேற்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதையடுத்து பெல்ஜியத்தின் Spa-Francorchamps பகுதியில் நடைபெறும் கார் ரேஸில் ஏப்ரல் மாதத்தில் பங்கேற்க உள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி, அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதே நேரத்தில் போர்ச்சுகல் நாட்டின் ஒரு பிரபல ரேஸிங் சர்க்யூட்டில், அஜித் குமார், தனது அணியின் டிரைவிங் கோச்சுடன் ஆய்வில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.