ஐரோப்பாவில் அமைந்துள்ள பெல்ஜியம் நாட்டின் புகழ்பெற்ற ஸ்பா பிராங்கோர்சாம்ப்ஸ் சுற்றுவட்டத்தில் சர்வதேச அளவிலான கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அவரது கார் பந்தயக்குழு உற்சாகமாக கலந்து கொண்டது. இந்த போட்டிக்காக கடந்த சில நாட்களாகவே அஜித் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த பயிற்சிக் காலத்தில் அவர் ஒரு சிறிய விபத்தையும் எதிர்கொண்டார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் அஜித்தின் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றது. இதன் மூலம் அவர்கள் பி2 போடியம் பினிஷ் என்பதை உறுதி செய்தனர். இந்த வெற்றியை உலகளாவிய கார் பந்தய அரங்கத்தில் இந்தியா பெற்ற முக்கியமான சாதனையாக கருதுகிறார்கள்.
இந்த போட்டியை நேரில் பார்த்த இந்திய ரசிகர்கள், அஜித் மற்றும் அவரது அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக “ஏகே… ஏகே…” என ஆரவாரம் எழுப்பி, இந்திய தேசிய கொடியை ஆட்டி தங்களின் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். ஏற்கனவே போச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களிலும் அஜித் அணிகள் மூன்றாவது இடங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.