ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம், முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவது என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அஜித் நடிக்கும் மற்றொரு படம் “விடாமுயற்சி” பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், “குட் பேட் அக்லி” படத்தின் வெளியீடு தள்ளி சென்றது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விலகியதின் காரணமாக, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.