Friday, January 3, 2025

தந்தையோடு மோதும் அதிதி ஷங்கர்… கேம் சேன்ஜர் VS நேசிப்பாயா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்தி நடித்த ‘விருமன்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். தற்போது இவர் ஆகாஷ் முரளியுடன் இணைந்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, பல புதிய படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த பட்டியலில் அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ராம்சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ஷங்கரின் மகளான அதிதி நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படமும் பொங்கல் ரிலீசாக வருகிறது. இதன் மூலம் முதன்முறையாக, தனது தந்தை இயக்கிய திரைப்படத்துடன், அதிதி நடித்த படம் மோதவிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News