Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

பிரபுதேவாவின் லைவ் டான்ஸ் கான்செர்ட்-ல் இருந்து விலகிய நடிகை சிருஷ்டி டாங்கே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறையில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் பிரபுதேவா, தனக்கே உரிய நடனத்திற்காக வெவ்வேறு தரப்பு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வரிசையில், நாளை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “பாகுபாட்டின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், “இதற்கு பிரபுதேவாவிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை” எனவும் தெரிவித்தார். இதனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனாலும், “நான் எப்போதும் பிரபுதேவாவின் பெரிய ரசிகையாகவே இருப்பேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News