திரைப்படங்களில் இருந்து தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வரும் சமந்தா, சமீபகாலங்களில் ஆன்மிகத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்குடன், வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரவும் தொடங்கியுள்ளார்.
குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக, கடந்த டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்கா சென்றிருந்தார்.
அங்கிருந்து தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தார் சமந்தா. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய அவர், சென்னையில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மும்பையில் நடைபெறும் புதிய வெப்சீரிஸ் படப்பிடிப்பில் பங்கு பெறுகிறார்.