சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தீவிரமாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இவர், தெலுங்கு திரையுலகில் பல சிறப்பான படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவார். சினிமா மீதான ஆர்வத்தால் சின்னத்திரைக்கு வந்த இவர், சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டு ‘மசாலா படம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றியிருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா என்ற பெயர் பற்றியே பேச்சு இருக்கும். இந்தப் படம் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
Video Link: https://www.instagram.com/reel/DHv2-8JysW8/?igsh=MWt0NjV3eGxocmxueA==
இணையத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீன உடையில் கவர்ச்சியாக நடனமாடி பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‘சீரியலில் மாமியார், நிஜத்தில் நவீன பெண்’ என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.