ஹிந்தி படங்களில் நடித்து வந்தபோது மும்பையில் குடியிருந்த பிரியங்கா சோப்ரா, 2018ல் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்ட பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். என்றாலும் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார். பின்னர் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், ராஜமவுலி கால்ஷீட் கேட்கும் போதெல்லாம் கொடுத்து நடிக்க போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள தன்னுடைய 13 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்த செய்திகள் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.
