2023-ஆம் ஆண்டு, இயக்குநர் அஜய் பூபதி எழுதி இயக்கிய திகில் திரைப்படமான “செவ்வாய்க்கிழமை” வெளியானது. இந்த படம், கன்னடத்தில் “மங்களவாரம்,” இந்தியில் “மங்களவார்,” தமிழில் “செவ்வாய்க்கிழமை,” மலையாளத்தில் “சோவ்வாழ்ச்ச” என்ற பெயர்களில் வெளியாகியது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155821.jpg)
இந்த படத்தில், நடிகை பாயல் ராஜ்புட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், “செவ்வாய்க்கிழமை” படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை இயக்குநர் தற்போது தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாயல் ராஜ்புட்டுக்கு பதிலாக புதிய கதாநாயகியை தேர்வு செய்ய இயக்குநர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155823.png)
இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிலையில், பாயல் ராஜ்புட் தற்போது “வெங்கடலட்சுமி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முனி எழுதி, இயக்கி, திரைக்கதையும் அமைத்துள்ளார்.