Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘ஆனந்தம்’ என்ற வார்த்தையோடு கோவில் வழிபாட்டு புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மிருணாள் தாக்கூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் ஆன்மிக நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். வேறு மதத்தைச் சார்ந்த நடிகைகளும் கூட இந்து மத கடவுள்களை வழிபடுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. நயன்தாரா, சமந்தா போன்றோர் இதற்குப் சிறந்த உதாரணம்.

‘சீதா ராமம், குஷி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் ஜக்தேஷ்வர் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு சென்று அங்கு வழிபாடு செய்தார். இந்த ஆன்மிக அனுபவத்தின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ‘ஆனந்தம்’ என்ற ஒற்றை வார்த்தையை கொண்டு அந்தப் புகைப்படங்களை அவர் பதிவிட்டார்.

அவரது இந்த பக்திமிக்க புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. நடிகைகளின் ஆடை மற்றும் அலங்கார புகைப்படங்களுக்கு மட்டுமின்றி, அவர்களது ஆன்மிகப் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக் செய்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News