மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘மாறன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்திலும், சித்தாந்த் சதுர்வேதியுடன் ‘யுத்ரா’ படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது, பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’, மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ மற்றும் கார்த்தியின் சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘யுத்ரா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர், தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.