Tuesday, January 7, 2025

கேம் சேன்ஜர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காத நடிகை கியாரா‌ அத்வானி… காரணம் இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார். இசையை தமன் அமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ராம் சரண், ஷங்கர் மற்றும் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். ஆனால், கியாரா அத்வானி இதில் பங்கேற்கவில்லை.

கியாரா அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் பரவின. ஆனால், இதனை கியாரா அத்வானியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: “கியாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. தொடர் வேலை காரணமாக ஏற்பட்ட சோர்வால் ஓய்வு எடுத்து வருகிறார்” என்றார்.

- Advertisement -

Read more

Local News