தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹெபா படேல். 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆத்யக்சா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்புத்திய ஹெபா, பின்னர் ‘ஆலா ஏல’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியைப் பெற்றதால், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநாட்டினார். தமிழில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள அவர், தற்போது தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ஒடெலா 2’ திரைப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில், தமன்னாவுடன் பணியாற்றும் அனுபவத்தை நடிகை ஹெபா படேல் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “ஒடெலா 2 படத்திற்காக தமன்னா மிகவும் கடினமாக உழைத்தார். அவருடைய அந்த உழைப்பு எனக்கு மிகுந்த உந்துசக்தியையும், ஊக்கத்தையும் அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.