பாலிவுட்டின் முன்னணி நடிகையாகத் திகழும் தீபிகா படுகோனே, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 80 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார். பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களை வணிக நோக்கத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் பக்கங்களில் விளம்பர வீடியோக்கள் மற்றும் வணிகத் தொடர்புடைய பதிவுகளை, லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் தொகை பெற்றே பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், தீபிகா படுகோனே சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஹோட்டல் விளம்பர வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ உலக அளவில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளது. இரண்டு மாதங்களில் அந்த வீடியோ 1.9 பில்லியன் பார்வைகளை (அதாவது 190 கோடி) பெற்றுள்ளது.
இந்த அளவிற்கு பார்வைகள் பெற்ற மற்றெந்த பிரபலரின் வீடியோவும் இதுவரை இல்லை. இதற்கு முன்னர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவினது ஒரு விளம்பர வீடியோ 1.6 பில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. அந்த சாதனையை தீபிகா தற்போது முறியடித்துள்ளார். தற்போது, தீபிகா படுகோனே அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.