புன்னகை பூவே’ சீரியலில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சைத்ரா சக்காரி. முன்னதாக 2019ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தமிழ்ச்செல்வி’ தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருந்த இவர், கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது கலைவாணி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா, திடீரென இந்த சீரியலை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
