Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து மனம் திறந்த‌ நடிகை அஞ்சலி… என்ன சொன்னார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த ‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தோல்வியில் முடிந்தது. மேலும், இப்படத்தை எதிர்த்து பல நெகட்டிவ் பரப்புரைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையில், தெலுங்கு திரைப்படமான ‘மத கஜ ராஜா’ இவ்வாரத்தில் வெளியாக உள்ளதற்கு முன்பாக, அந்த படத்தின் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், நடிகை அஞ்சலியிடம் ‘கேம் சேஞ்ஜர்’ படத்தின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஞ்சலி, “’கேம் சேஞ்ஜர்’ படம் குறித்து பேசவேண்டும் என்றால், அதற்கென தனியாக ஒரு பேட்டி நடத்த வேண்டும். அனைவருக்கும் அதன் காரணம் தெரியும். சில படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தனிப்பட்ட முறையில் செய்கிறார்கள். ‘கேம் சேஞ்ஜர்’ எனக்கு அப்படிப் பட்ட ஒரு திரைப்படம். பலரும் எனது நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அதுவே எனக்கு போதுமானது. மற்ற விஷயங்களைப் பற்றி விவரமாக பேச வேண்டுமானால், அரைமணி நேரமோ அல்லது முக்கால்வாசி நேரமோ தனியாக அளிக்க வேண்டும்,” என்றார்.

‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படம் அதன் முழு பட்ஜெட்டின் பாதியை மட்டுமே வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

Read more

Local News