நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். இப்போது சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் வைபவ், அதுல்யா நடிக்கிறார்கள். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நான் பேய் பேசுறேன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் வைபவ். ஆனாலும், மணிகண்டன் பற்றி இந்த பட நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. ஆனால், நடிகர் ஜான் விஜய் மணிகண்டனை புகழ்ந்து தள்ளினார். அவர் சிறப்பாக நடிக்கிறார். அவர் சிஸ்டர் கஷ்டப்பட்டு நடித்து முன்னுக்கு வந்தார். மணிகண்டனும் அப்படி வருவார் என்றுள்ளார்.
