Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அமைகிறதா நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜூன் கூட்டணி… இன்று வெளியாகியுள்ள முக்கிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘தேவி’, ‘தேவி 2’, ‘கோமாளி’, ‘LKG’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

நிறுவனம் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘சுமோ’, மற்றும் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

அடுத்ததாக வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க இருக்கும் புதிய படத்தை நாளை மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News