சிவகங்கையில் உள்ள கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 9 கட்டங்களாக அகழாய்வு பணிகளை நடத்தியுள்ளன. இந்த அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பல பண்டைய பொருட்கள் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அந்த அருங்காட்சியகத்துக்கு சென்று அந்த பொருட்களை பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.17.80 கோடி செலவில் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில், மொத்தம் 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரபல நடிகர் வடிவேலு கீழடியில் உள்ள அந்த அருங்காட்சியகத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அவர் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.