Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

`முரா’ படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் எஸ்.ஜே.சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா’ மலையாள திரைப்படம் உருவாகி கடந்த 8 ஆம் தேதி வெளியானது .இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவை வாழ்த்தி நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” இது மாதிரியான ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு மக்கள் எமோஷனலாக ஃபீல் செய்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. படத்தை குறித்து வரும் பல நல்ல விமர்சனங்களை பற்றி கேட்டேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், இயக்குனர் முஸ்தஃபா மற்றும் நடித்த இளம் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.இப்படத்தின் இயக்குனரான முஸ்தஃபா இதற்கு முன் அன்னா பென் நடிப்பில் வெளியான தேசிய விருதைப்பெற்ற கப்பேலா திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Read more

Local News