தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது அவர், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ராணா டகுபதி, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்குத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகமாக வரவேற்பு வழங்கியது. சாமி தரிசனம் முடித்தபின், சிவகார்த்திகேயன் மீண்டும் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு திரும்பி சென்றார்.