Touring Talkies
100% Cinema

Thursday, August 28, 2025

Touring Talkies

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். மேலும், 100 வயது நிறைவடைந்த அவருக்கு, வயது மூப்பு காரணமாக உருவான பிற உடல் சிக்கல்களுக்கு நரம்பியல், நுரையீரல், இதய நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் முழு நலத்துடன் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்கள் குழுவின் தீவிர சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. வயது மூப்பு காரணமாக அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் இருவரும் மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் ரவிக்குமார், தோழர்களிடம் அனுமதி பெற்று, நானும் சிவகார்த்திகேயனும் நல்லகண்ணு தோழரை சந்தித்தோம். விரைவில் நலம்பெற்று வாருங்கள் என பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News