வரும் 8ஆம் தேதி லண்டனில் இசைஞானி இளையராஜா நடத்த உள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக, பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள்.
அந்த வரிசையில், நடிகர் சிவகார்த்திகேயனும் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர் இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்று, அவருக்கு பூங்கொத்து வழங்கி, ஆசி பெற்றார்.
இளையராஜா, சிவகார்த்திகேயனின் நேரடி வாழ்த்துகளைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.