Monday, November 4, 2024

பைனான்சியல் திரில்லர் படத்தில் நடிக்கும் நடிகர் சத்யராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர்! #ZEBRA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஓல்டு டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ஜீப்ரா’ என்ற திரைப்படம், இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் அவர்களால் இயக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், அக்டோபர் 31 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியிடப்பட உள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியான ‘பெண் குயின்’ படத்தின் மூலம் பிரபலமாகிய ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், சத்யதேவ், தனஞ்சயா, பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் கூறுகையில், “இந்திய அளவில் மிகப்பெரிய நிதி குற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரமாண்டமான பைனான்சியல் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றி நடைபெறும் பெரிய நிதி குற்றங்கள் குறித்து நாம் அறிந்திராத பல உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு சஸ்பென்ஸ், அதிரடி திரைப்படமாக இது இருக்கும். மூன்று முக்கிய கதைகள் இதில் இணைந்து அமைந்துள்ளன, அவற்றை ஒன்றாக சேர்த்து நிறுக்கும் முக்கிய பாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News