நடிகர் ரியோ ராஜ், ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘நிறம் மாறும் உலகில்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ரியோ ராஜ் மூன்று புதிய படங்களை ஒப்பந்தமாகியுள்ளார் என கூறியுள்ளார். அதன்படி ரியோ முதலில் ஒப்பந்தம் செய்துள்ள படத்தை, அறிமுக இயக்குநர் ராம் இயக்க, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
மேலும், ரியோ ராஜை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் ஆகியோரும் தலா ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


