Tuesday, October 1, 2024

நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்… வெளியான மருத்துவமனை அறிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (செப்டம்பர் 30) அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

ஆனால், ரஜினிகாந்துக்கு அடிவயிற்று பகுதியில் ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டுள்ளது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சையாக ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது, அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News