Saturday, September 14, 2024

தனுஷ் படத்தில் மீண்டும் இணைந்த நடிகர் ராஜ் கிரண்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷின் நடிப்பில், மற்றும் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது. தற்போது குபேரா போன்ற சில படங்களில் நடித்துவரும் தனுஷ், மீண்டும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இளம் நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “கோல்டன் ஸ்பாரோ” பாடல் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் ஆகிய சீனியர் நடிகர்களை தனுஷ் நேரில் சந்தித்து கதை சொல்லி, அவர்களின் சம்மதத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ராஜ் கிரணுடன் “வேங்கை” படத்தில் மகனாக நடித்தார் தனுஷ். மேலும், தனுஷ் இயக்கிய “ப. பாண்டி” படத்திலும் ராஜ் கிரண் முதன்மை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News