எம்புரான் டிரைலரிலேயே தனது மிரட்டலான பின்னணி இசை மூலம் அதிக எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தார் தீபக் தேவ். இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிறிய பகுதியை பாடுவதற்கு ஒரு புதிய பெண் குரல் ஒன்றை தேடி வந்தார் தீபக் தேவ். அப்போது பிரித்விராஜின் மகள் அலங்க்ரிதாவின் குரலை கேட்டதும் அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்து இந்த படத்தில் அந்த பாடலை பாட வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே பிரித்விராஜன் மனைவி ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில் அவரது மகளும் சினிமாவில் இந்த பாடல் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல பிரித்விராஜின் சகோதரர் நடிகர் இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனாவும் இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
