Thursday, October 3, 2024

மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த “தி கோட்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதன் பின்னர், விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 69” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் படம் விஜயின் கடைசி திரைப்படம் என கூறி வருகின்றனர். இதன் பிறகு அவர் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. “தளபதி 69” திரைப்படத்தை “தீரன்” மற்றும் “துணிவு” போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.

இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்தால் தமிழில் தயாரிக்கப்படும் முதல் படம் ஆகும். ‘அனிமல்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோல், இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு மேலும், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர் என்று படக்குழு அறிவித்தது. இந்தப் பட்டியலில், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியாமணி ஆகியோரும் “தளபதி 69” படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர்களுடன் சேர்த்து, நடிகர் நரைன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News